கீழக்கரையி்ல் இன்று (19.02.2011) காலை தெற்குத்தெரு பள்ளி முக்கு ஜங்ஷன் அருகே லாரியின் மேல் பாகம் மின் கம்பியி்ல் உரசி உயர் அழுத்த மின் கம்பி அறுந்து, லாரியின் பின்னால் இரு சக்கர வாகனத்தில் (பைக்) வந்து கொண்டிருந்த ஜின்னா தெருவை சேர்ந்த 25 வயதுடைய மின் தொழிலாளி (எலக்ட்ரிசியன்) கண்ணனின் மீ்து விழுந்ததால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இச்செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.