காயல்பட்டணம் வாவு வஜீஹா மகளிர் கல்லூரியில் 2ம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி கல்லூரி நிறுவன தலைவர் வாவு செய்யித் அப்துர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியினை முதலாம் ஆண்டு வணிகவியல் மாணவி கிதுரு ஃபாத்திமா கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். கல்லூரி செயலாளர் வாவு மொஹூதஸிம் வரவேற்றார். கல்லூரி நிர்வாக அதிகாரி ஹம்சா முஹைதீன் துவக்க உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் மாணிக்கம் 148 மாணவிகளுக்கு இளங்கலை பட்டம் வழங்கி பாராட்டிப் பேசினார்.தொடர்ந்து பட்டம் பெற்ற மாணவிகளிடம் கல்லூரி முதல்வர் மெர்ஸிஹென்றி உறுதிமொழி பெற்றுக் கொண்டார்.
கல்லூரி நிர்வாக குழுவினர் வாவு அபுல் ஹஸன், வாவு ஹபீபுல்லாஹ், வாவு அப்துல் கஃப்பார், காயல்பட்டணம் ஸுபைதா மகளிர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் வாவு காதர் ஸாஹிப், தாய்லாந்து காயல் நலமன்ற பிரதிநிதி வாவு உவைஸ், கே.எம்.டி. மருத்துவமனைச் செயலாளர் முஹம்மது அபூபக்கர், காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகி செய்யீத் முஹம்மத் அலீ உட்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி துணை செயலாளர் வாவு அஹ்மத் இஸ்ஹாக் நன்றி கூறினார்.